நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகம் துண்டிப்பு!!

26092019BurundiWash110 0

ஆறு மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணத்தை செலுத்தாதவர்களின் நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொது முகாமையாளர் ஏக்கநாயக்க வீரசிங்க,

கடந்த வருடம் முதல் 1200 மில்லியன் ரூபாவை நீர் பாவனையாளர்கள் செலுத்தத் தவறி உள்ளதாகவும் ஆறு மாதங்கள் அல்லது இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நிலுவையாக உள்ள நீர் பட்டியலுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

27 லட்சத்தி 50 ஆயிரம் பேருக்கு மாதாந்தம் 50 மில்லியன் கனமீட்டர் குடி நீரை வழங்குகின்றோம்.

மேலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2500 மில்லியன் ரூபாயாக இருந்த நிலுவை கட்டண தொகையை செலுத்தாததனால் டிசம்பர் மாதமளவில் அத்தொகை 7200 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.

மாதாந்த நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்தகட்ட பட்டியலில் 1.5 சதவீதம் தள்ளுபடியும் பணம் செலுத்த தாமதப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்தம் 2.5% தாமத கட்டணம் அறவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version