மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று நாள்களின் பின்னர், அவரது வீட்டுக்கு அருகில் இருந்த பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 52 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்தார்.
இந்நிலையில், தேடுதல் நடவடிக்கைகளின்போது, அவர் நேற்றைய தினம் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

