கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம், சந்தேகநபர் போதைப்பொருள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

