2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, இம்மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதனைத்தொடர்ந்து, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி, ஏழு நாட்களாக நடைபெற்ற நிலையில், இன்று 22ஆம் திகதி மாலையுடன் நிறைவடைகிறது.
அதனைத்தொடர்ந்து, இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பையடுத்து நாளை 23ஆம் திகதி முதல் குழு நிலையிலான விவாதம் இடம்பெறவுள்ளது.
இந்த விவாதம், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதம் இடம்பெறவுள்ளது.
. அதனைத்தொடர்ந்து, வரவு – செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியன பாதீட்டை எதிர்த்து வாக்களிக்கவுள்ளன.
#SriLankaNews
Leave a comment