அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவுள்ளனர். இதன்படி இருவரும் வகிக்கும் அமைச்சு பதவிகள் மற்றவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
உதய கம்மன்பில வகிக்கும் வலுசக்தி அமைச்சு பதவி தற்போதைய மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிடம் வழங்கப்படவுள்ளது.
போக்குவரத்து அமைச்சராக செயற்படும் பவித்ராதேவி வன்னியாராச்சி, மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
விமல் வீரவன்ஸவின் கைத்தொழில் அமைச்சு பதவி, அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. அவர் வகிக்கும் கல்வி அமைச்சு பதவி எஸ்.பியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுமக நியமிக்கப்படவுள்ளார்.
#SriLankaNews
Leave a comment