மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹியா இடையேயான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இரவு நேரத் தபால் ரயில் தடம் புரண்டுள்ளது.
இதனால் மலையகப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதோடு, முக்கியமாக பதுளை – கொழும்பு ரயில் சேவைகளும் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், ரயில் மார்க்கத்தில் உள்ள மண்மேடுகளை அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில் பயணிகள் மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.