” நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்ககூடிய வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படும்.” – என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் அதற்கு முன்னர் மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெறுவதற்காக நிதி அமைச்சர் இன்று கண்டிக்கு வருகை தந்திருந்தார்.
தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பஸில் இவ்வாறு கூறினார்.
Leave a comment