பல்கலை நுழைவு -வெளியாகியது வெட்டுப்புள்ளி!
பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த வெட்டுப்புள்ளி விபரம் வெளியாகியுள்ளது .
இது தொடர்பான மேலதிக விபரங்களை www.ugc.au.lk எனும் இணையத்தளத்துக்கு சென்று பார்வையிடமுடியும்.
அடுத்த மாதமளவில் பல்கலைக்கழக z -score வெளியாகுமென பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார் .
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னர் பல்கலைக்கழகங்களை மீளத்திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment