வடகொரியா ஒரே மாதத்தில் 07 வது சோதனை நடவடிக்கையினை இன்று மேற்கொண்டுள்ளதாக தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா தனது மிகப்பெரிய ஏவுகணையை, கிழக்கு கடற்கரையில் இன்று ஏவுகணை சோதனையினை உள்ளூர் நேரப்படி 07:52 மணிக்கு நடாத்தியது.
குறித்த ஏவுகணை 2,000 கிமீ உயரத்தை எட்டியதாகவும், 800 கிமீ தூரத்தை 30 நிமிடங்களில் கடந்து, ஜப்பான் கடலில் இறங்கியது என்றும் ஜப்பானிய மற்றும் தென் கொரிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இம்மாதம் வடகொரியா மொத்தம் ஏழாவது சோதனையை நடத்தியுள்ள நிலையில் ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
வட கொரியாவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனை மற்றும் அணு ஆயுத சோதனைகளுக்கு தடை விதித்துள்ளது.
கடுமையான தடைகளையும் ஐ.நா. விதித்துள்ள நிலையில், தொடர்ந்தும் தடையை மீறும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன், தனது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இதனை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
#WorldNews
Leave a comment