ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமை நிலைவரம் தொடர்பில் இன்று (03) நடைபெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய, உக்ரைன் போரால் உருவாக்கியுள்ள நிலைமை குறித்து மனித உரிமை பேரவை அவசரமாக விவாதிக்கவேண்டிய நிலை காணப்படுவதாலேயே, இலங்கை தொடர்பான கலந்துரையாடல் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பான விஷேட விவாதம் இன்று மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ளது.
#SruLankaNews