wp7849047
இந்தியாசெய்திகள்

அமைச்சராகிறார் உதயநிதி!

Share

தி.மு.க. இளைஞரணி செயலாளராக 2-வது முறையாக உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அப்போதே விரைவில அவ்ருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, நாளை மறுநாள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என தகவல்கள் வெளியானது. உதயநிதி அமைச்சராகும் அதே நாளில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுதினம் அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

எதிர்வரும் 14-ம் திகதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் தனி அறை ஒன்று தயாராகி வருவதாகவும், நாளை இரவுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
WhatsApp Image 2025 11 27 at 23.47.04 f47798a4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மழையிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும் ‘மாவீரர் தின...

images 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம்: எலிக்காய்ச்சல் காரணமாக 17 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – அல்வாய் கிழக்கு, அல்வாய் பகுதியினைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவன் எலிக்காய்ச்சல்...

images 10
செய்திகள்இலங்கை

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 மில்லியன் இழப்பீடு: ஜனாதிபதி பணிப்புரை!

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு...

PowerCut 1200px 22 11 28 1000x600 1
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலை: மின் விநியோக மார்க்கம் பாதிப்பால் பல பகுதிகளில் மின்சாரம் தடை!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாகப் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை...