இறக்கக்கண்டியில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!!

fw

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறக்கக்கண்டி  கிராமத்தில் இன்று காலை இரு பாடாசலை மாணவர்கள்  நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்கள்  இறக்கக்கண்டி வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த அல்ஹம்ரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் முகமது அர்ஹம்(15) , முஹமட் சஹி(14) ஆகியோர் என தெரியவந்துள்ளது.

கொழும்பிலிருந்து வந்த உறவினர்களுடன் இறக்கக்கண்டி கடற்கரைக்கு நீராடச்சென்ற போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version