திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறக்கக்கண்டி கிராமத்தில் இன்று காலை இரு பாடாசலை மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இதில் உயிரிழந்தவர்கள் இறக்கக்கண்டி வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த அல்ஹம்ரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் முகமது அர்ஹம்(15) , முஹமட் சஹி(14) ஆகியோர் என தெரியவந்துள்ளது.
கொழும்பிலிருந்து வந்த உறவினர்களுடன் இறக்கக்கண்டி கடற்கரைக்கு நீராடச்சென்ற போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment