திருகோணமலை விபத்தில் அருட்தந்தை உட்பட இருவர் பலி!!

கோர விபத்தில் வணபிதாவும்

திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில்  அருட்தந்தை மற்றும் வாகன சாரதி ஆகியோர் பலியாகினர்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் திருகோணமலை நோக்கி வந்த சொகுசு காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமாகினர்.

திருகோணமலை, அன்புவளிபுரம் சகாய மாதா ஆலயத்தின் பங்குத் தந்தை கணேசபிள்ளை நிதிதாசன் (வயது 49) என்பவரும், கார் சாரதியுமே மரணமானார்கள்.

மரணமான பங்குத்தந்தை முன்னர் கிழக்கிலங்கை மனிதாபிமான பொருளாதார அபிவிருத்தி (எஹெட்) நிறுவனத்தின் திருகோணமலைப் பணிப்பாளராகவும் சேவையாற்றியிருந்தார்.

மணல் ஏற்றி வந்த கனரக வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ஹொரவ்பொத்தானை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version