மொரட்டுவ பிரதேசத்தில் யாசகம் பெறும் பெண்ணுக்கு சொந்தமாக இரு வீடுகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி சுமார் 200,000 ரூபாவை மோசடி செய்த பிச்சைக்காரப் பெண் ஒருவரை மொரட்டுவ பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.
உயன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் தனது ஏ.டி.எம். அட்டை தவறிவிட்டதாகவும், அதில் இருந்து சுமார் 130,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய களுத்துறை வடக்கு , விலேகொட பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
மொரட்டுவ பிரதேசத்தில் யாசகம் பெற்றுக்கொண்டிருந்த இவர் ஏ டி எம் அட்டை தரையில் விழுந்து கிடந்த நிலையில் தான் எடுத்ததாக விசாரணைகளில் தெரிவித்திருந்தார்.
மேலும் உணவு, பானங்கள் வாங்குவதற்காக அவரது கணவர் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை பொலிஸாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
குறித்த சந்தேகநபர் யாசகம் பெற்றாலும் 20,000 ரூபா வாடகைக்கு கொடுக்கப்பட்ட இரண்டு வீடுகளின் உரிமையாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment