நாட்டில் இரு வேறு சட்டத்திட்டங்கள்! – முஜிபூர் ரஹ்மான்

rahuman

” நாட்டில் அமுலில் உள்ள சுகாதார சட்டத்திட்டங்கள்கூட இருவேறு விதமாகவே அமுல்படுத்தப்படுகின்றன.”- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று சபையில் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல் அறிக்கையில், விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம். ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று கூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பயன்படுத்தியே ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை தடுக்க முயற்சி எடுக்கப்பட்டது.

பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாதெனில், மஹிந்த ராஜபக்ச கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டிக்கு எவ்வாறு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்? இதன் பின்னணி என்ன?

காலியில் நடைபெறும் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டிக்கும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, மஹிந்த ராஜபக்ச கிண்ணத்தொடருக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? ” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version