வவுனியா, கனகராயன்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பிக்கப் ரக வாகனமும், டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.
வவுனியாவில் இருந்து ஏ-9 வீதியில் பயணித்த பிக்கப் வாகனமும், வவுனியா நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a comment