இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசிற்கு ஆதரவாக டுவிட்டர் நிறுவனம் செயற்படுகிறது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக தன்னைப் பின் தொடர்பவர்களை டுவிட்டர் நிர்வாகம் கட்டுப்படுத்தி வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
சமூகவலைதளமான டுவிட்டர் பக்கத்தில் என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 2 இலட்சம் என இருந்தது.
ஆனால் கடந்த 2021 ஓகஸ்ட் மாதம் முதல் 2,500 என்ற எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளது . என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.9 கோடியாக மாற்றங்கள் ஏதுமின்றி காணப்படுகின்றன.
டெல்லியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்பப் புகைப்படத்தை பகிர்ந்த நாளில் இருந்து, இவ்வாறான பிரச்சினைகள் மேலோங்கியுள்ளன.
வேளாண் சட்டம் குறித்து பதிவிட்ட காணொளியானது அதிக பார்வைகளைப் பெற்றிருந்த நிலையில், அக்கணொளியானது நீக்கப்பட்டது என்றும் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டுவிட்டர் தளத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை விவரங்களை அனைவரும் பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், ஒருபோதும் டுவிட்டர் தளம் தன்னிச்சையாக செயற்படாது .
பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஏற்றம், இறக்கம் இருப்பது சாதாரண விடயம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி எழுதிய கடிதத்திற்கு டுவிட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.
#World
Leave a comment