நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்று பாவிக்கும் மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகள் போன்றவற்றை இயன்றளவுக்கு அணைத்து மின்சாரத்தை சேமிக்க மக்கள் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சார நெருக்கடி தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கையில்,
நாட்டில் மின்வெட்டு அமுலாக்கம் தொடர்பில் இன்றையதினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களின் நிலைமைகள் ஆராயப்படவுள்ளன. அவற்றின் நிலைமைகள் ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
நீண்டகாலமாக நாட்டில் மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்படவில்லை. அதன் காரணமாகவே தற்போது மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான மின்சார நெருக்கடி ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என 2016 ஆம் ஆண்டே எமது ஆணைக்குழு ஏற்கனவே எச்சரித்துள்ளது – என்றார்.
#SriLankaNews