LIOC நிறுவனத்தால் இலங்கைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள எண்ணெய் தாங்கிகளின் குத்தகைக்காலம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
லங்கா இந்தியன் எண்ணெய் கம்பனியால் (LIOC) திருகோணமலை எண்ணெய் தாங்கியில் தற்போது வழங்கப்பட்டுள்ள எண்ணெய் தாங்கிகளின் குத்தகைக்காலமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, LIOC நிறுவனம் புதிதாக நிறுவப்பட்ட டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிடெட் உடன் இணைந்து கூடுதலாக 61 தாங்கிகளை உருவாக்கவுள்ளது என்றும், இதன் 51 வீதமான பங்குகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும் 49 வீதமான பங்குகள் LIOC நிறுவனத்துக்கும் சொந்தனானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews