முகநூலில் அஞ்சலி – மன்னாரில் இளைஞன் கைது!

Arrested

விசேட அதிரடிப்படையினரால் இளைஞர் ஒருவர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version