சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் இம்மாதம் ௨௫ ஆம் திகதி!

சுரேஷ் சலே 10

அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுடன் தொடர்புடைய வகையில் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தி முன்வைக்கப்பட்ட மனுவுடன் தொடர்புடைய இடையீட்டு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆராயப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் இடையீட்டு மனுதாரர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணிகள் விடயங்களை முன்வைத்தனர்.

அத்துடன், இதனை அடுத்து மேலதிக விடயங்களை ஆராய்வதற்காக இம்மாதம் 25 ஆம் திகதி வரை மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exit mobile version