பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையிலான மீண்டும் போக்குவரத்து சேவை இடம்பெற போவதாக பாகிஸ்தானின் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையிலான மீண்டும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.
ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய பின் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
அதன்பின் தலிபான் அரசுக்கு பாகிஸ்தான் அங்கீகாரம் வழங்கியது.
இந்த நிலையில் ஆப்கானின் இடைக்கால வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்ட சில அதிகாரிகள் பாகிஸ்தான் சென்றிருந்தனர்.
இருநாடுகளுக்கும் இடையில் நட்பு ரீதியிலான பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆப்கான் கோரிக்கையை வரவேற்றுள்ள பாகிஸ்தான், அடுத்தவருடத்திலிருந்து பேருந்து சேவை தொடங்கப்படும் என அவர்களுக்கு உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து சம்பந்தமாக ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவித்துள்ளன.
#world
Leave a comment