திருகோணமலை- கிண்ணியாவில், குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் தற்காலிக படகுப்பாதை கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.
அவர்களில் அதிகமானவர்கள் பாடசாலை செல்லும் மாணவர்களாவர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த பாலத்தை நிர்மாணிக்க முன்னர் அதற்கு தற்காலிக பாதை ஒன்றை நிர்மாணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று இராஜாங்க அமைச்சரிடம் அன்று நான் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில் அவர் அதனை நக்கலாக எடுத்துக்கொண்டார்.
ஆனால் இன்று பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.
இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்து அரசின் அசண்டையீனம் காரணமாகவே நடந்துள்ளதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
குறித்த பாதை சட்டபடி இயங்குகிறதா? எந்த அனுமதியுடன் இயங்குகின்ற பாதை? இதற்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை அறிவிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
#SrilankaNews