இலங்கை பிரபல வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு கிராண்ட்பாஸில் வசிக்கும் 43 வயதுடையவர் என்றும் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான ஊடாக நாட்டிற்கு வந்திருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
மொத்தம் 1.5 கிலோ எடையுள்ள இரண்டு பொதிகளில் மறைத்து கொண்டுவரப்பட்டதாகவும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 30 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் போதைப்பொருட்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்யப்பட்டவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment