தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் – தொழிற்சங்க கூட்டணி அதிரடி!

stalin

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் – தொழிற்சங்க கூட்டணி அதிரடி!

தமது ஒன்லைன் வேலை நிறுத்தம் உட்பட அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளும் தொடரும். இவ்வாறு
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவையில் தீர்வு முன்வைக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் தொழிற்சங்க கூட்டணி பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரவையில் அதிபர் ஆசிரியர்கள் சம்பள பிரச்சினை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆசிரியர் சங்கங்கள் 2018 ஆம் ஆண்டுக்கான சம்பள முன்மொழிவையும் ஒரே நேரத்தில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளன. இருப்பினும் இக் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

சேவைத் தரம், கௌரவம் மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றுக்கு இணையான சம்பளத்துக்கான போராட்டத்தையே நாம் மேற்கொண்டுள்ளோம். இந்த நிலையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஏற்றுக்கொள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தயாராக இல்லை.

இந்த நிலையில், அமைச்சரவை மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை நாம் நிராகரிக்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Exit mobile version