இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய 32 ஆயிரத்து 375 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து 29 ஆயிரத்து 514 சுற்றுலாப் பயணிகளும், பிரிட்டனிலிருந்து 20 ஆயிரத்து 744 சுற்றுலாப் பயணிகளும் இந்தக் காலப்பகுதியில் இலங்கை வந்துள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 4 ஆயிரத்து 345 ஆகும்.
ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 834 ஆகும்.
மார்ச் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் மாத்திரம் 25 ஆயிரத்து 511 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment