COVID – இன்று மட்டும் தொற்று – 4,427
நாட்டில் இன்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 427 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன்படி, நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 386 பேர் குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்து 767 ஆக அதிகரித்துள்ளது.
Leave a comment