வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மதகுரு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா குட்செட்வீதியில் இன்று (14) காலை இடம்பெற்ற விபத்தில் மதகுரு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இருந்து குட்செட்வீதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும், குட்செட் பகுதியில் இருந்து நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் குட்செட்வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்தின் அருகே மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலையைச் சேர்ந்த 41 வயதுடைய கேதீஸ்வரன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment