LANKAQR
செய்திகள்அரசியல்இலங்கை

இன்று முதல் அறிமுகமாகும் Lanka QR முறை!!

Share

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வௌியேறும் வாயிலில் பணம் செலுத்த Lanka QR நடமாடும் செலுத்தல் செயலி இன்று முதல் அறிமுகப்படுத்தப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் Lanka QR நடமாடும் செலுத்தல் செயலியை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யும் நிகழ்வு இன்று (21) கொட்டாவ இடைபரிமாற்ற மத்திய நிலையத்தில் இடம்பெற்றது

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

நேஷன் ட்ரஸ்ட் வங்கிக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணைப்பின் அடிப்படையில் அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் போது கைகளினால் பணம் செலுத்துவதற்கு பதிலாக ( Manual Toll Collection MTC) இந்த Lanka QR நடமாடும் கட்டணப் பயன்பாடு பயன்படுத்தப்படலாம்.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியானது இலங்கை மத்திய வங்கி, லங்கா கியூஆர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றை Frimi மூலம் இணைக்கிறது.

இந்த Lanka QR நடமாடும் கொடுப்பனவு செயலியானது தற்போது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

மேலும் எதிர்காலத்தில் மற்ற அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பயன்படுத்தப்படும்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...