இந்தியா திருப்பதி ஏழுமலையானின் பிரமோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
பிரமோற்சவத்தின் நான்காம் நாள் உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது வேத, பண்டிதர்கள் பிரபந்தம் பாடி ஏழுமலையானுக்குக் கற்பூர ஆராத்தி எடுத்தனர்.
முன்னதாக, கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில், ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், பக்தர்கள் பலரும் பங்கேற்று திருப்பதி ஏழுமலையானின் அருளாசியைப் பெற்றுக்கொண்டனர்.
Leave a comment