பாகிஸ்தானில் மீண்டும் டிக்டாக்

tiktok

tiktok

பாகிஸ்தானில் மீண்டும் டிக்டாக் பயன்படுத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆபாசமான காணொளிகளை பதிவிட்டதாகக் கூறி தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியை மீண்டும் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

ஆபாசமான காணொளிகளை பதிவேற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆடி மாதம் டிக்டாக் செயலியை பாகிஸ்தான் தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீதான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது.

டிக்டாக் மீதான தடையை பாகிஸ்தான அரசு நீக்குவது இது நான்காவது முறையாகும்.

முன்னதாக ஒழுங்கீனமான மற்றும் அருவருக்கத்தக்க காணொளிகளை பதிவேற்றம் செய்து வெளியிட்ட புகாரின் அடிப்படையில் டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து 60 லட்சம் காணொளிகளை டிக்டாக் செயலி தனது தளத்திலிருந்து நீக்கியது.

சீன நிறுவனமான டிக்டாக் செயலி பாகிஸ்தானில் 3.9 கோடி பயனர்களைக் பயன் படுத்தி வருகின்றனர்.

#world

Exit mobile version