250126fisherman342
செய்திகள்இந்தியா

நெடுந்தீவில் கைதான 3 இந்திய மீனவர்களுக்கும் ஜனவரி 7 வரை விளக்கமறியல்!

Share

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (28) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் பயன்படுத்திய ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று முற்பகல் 11 மணியளவில் அவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபர்களை ஜனவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் ஏனைய உபகரணங்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளைத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...