நாட்டில் எதிர்வரும் நாட்களில் எந்தப் பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கூறமுடியாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சில மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாட்டின் சில தொழிற்சாலைகளைக் கூட நடத்த முடியாத நிலைமை உருவாகலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐந்து நாட்களும் வேலைசெய்யபடும் உலகின் மிகப்பெரிய நாடான சீனாவில் ஒரு நாள் மாத்திரமே திறக்கப்படுமாயின் உலகில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். நாம் பெரும்பாலான மூலப் பொருட்களைச் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம்.
இதேபோன்று தான் உலகில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.
இலங்கை அதனை இப்படிதான் கட்டுப்படுத்த வேண்டும் எனச் சிலர் கூறுவார்களாயின் அது செயல் முறை சாத்தியமற்றது. ஏனெனில் உலக சந்தையில் எரிவாயுவின் விலை 130 வீதமாக அதிகரித்துள்ளது.
ஆகவே விலையைக் குறைக்கும் முறையை அறிந்தவர்கள் எவராவது இருப்பின் என்னைச் சந்திக்குமாறு கூறுங்கள் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment