நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வருமானம் இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் 2000 ரூபா வழங்கப்பட்டு வருகிறது.
இந்த 2000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அது தொடர்பாக பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்காக 2000 ரூபா நிவாரணப்பணம் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. இதுவரையில் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அல்லது கொடுப்பனவுக்கு தகுதியிருந்தும் தெரிவு செய்யப்படாதவர்கள் பிரதேச செயலாளரிடம் தமது முறையீட்டை
வழங்குமாறு ஜனாதிபதி செயலணி மேலும் அறிவித்துள்ளது.
Leave a comment