நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகை குறைந்துள்ளது.
அத்துடன் பேலியகொடை மெனிங் காய்கறி சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகையானது 60 வீதமாக குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
இரசாயன பசளைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் இந்நிலமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகையானது எதிர்வரும் நாட்களில் குறைந்தால், தட்டுப்பாடு ஏற்பட்டு, மரக்கறிகளை கொள்வனவு செய்யவும் மக்கள் வரிசைகளில் நிற்கும் நிலைமை ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews