மைத்திரிபால சிறிசேன
செய்திகள்அரசியல்இலங்கை

நல்லாட்சியை விமர்சிக்க ‘மொட்டு’க்கு அருகதை இல்லை! – மைத்திரி பதிலடி

Share

“எனது தலைமையில் நல்லாட்சி திறம்பட நடைபெற்றது. இதை விமர்சிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்கு எந்த அருகதையும் கிடையாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தேசிய அரசமைக்கும் யோசனைக்கு எதிராகவும் அவர் கருத்து வெளியிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன,

”அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில், தேசிய அரசமைக்கும் யோசனை ஏற்புடையது அல்ல. இன்று அமைச்சுகளுக்குள் மோதல் இடம்பெறுகின்றது.

எமக்கு தேசிய வேலைத்திட்டமொன்றே அவசியம். அதனை முன்வைப்போம்.

நல்லாட்சி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அடியோடு நிராகரிக்கின்றோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...