வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நேற்று இரவு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான பணம் களவாடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த வைத்தியசாலையில் பணிசெய்யும் தாதியர் ஒருவருடைய அறையில் வைக்கப்பட்டிருந்த தாதியருடைய பணம் மற்றும் வைத்தியசாலையின் பணம் என்பன இவ்வாறு களவாடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் குணதிலக மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment