“ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி விரைவில் மலரும். அந்த ஆட்சியில் நான்தான் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிப்பேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மீண்டும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நல்லாட்சியின்போது தலைமைப்பதவிகளை வகித்தவர்களின் செயற்பாடுகள் காரணமாகவே அந்த அரசு கவிழ்ந்தது. தற்போதைய அரசும் அப்படிதான். எனவே, விரைவில் எங்கள் ஆட்சி வரும்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சு பதவி எனக்கு வழங்கப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். எமது ஆட்சி வருவது உறுதி என்பதால், எனக்கான அமைச்சு பதவியும் உறுதியாகியுள்ளது.
நல்லாட்சியின்போது, சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியை எனக்கு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த பதவி எனக்கு வழங்கப்பட்டால் முதலில் அவரைத்தான் கைது செய்வேன் என அஞ்சினார். அதனால் பதவி வழங்கவில்லை. வழங்கப்பட்டிருந்தாலும் மைத்திரி கூறியது நடந்திருக்கும்.” – என்றார் பொன்சேகா.
#SriLankaNews
Leave a comment