6 1 scaled
இந்தியாசெய்திகள்

ரூ.777 கோடியில் உருவான சுரங்கப்பாதை.., பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என மூடும் நிலை

Share

ரூ.777 கோடியில் உருவான சுரங்கப்பாதை.., பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என மூடும் நிலை

ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை பழுது பார்க்க முடியாது என அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தலைநகரான டெல்லியில் கடந்த 2022 -ம் ஆண்டு ஜுன் மாதம், ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

1.4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சாலை, டெல்லியின் கிழக்கு பகுதிகள் மற்றும் சேட்டிலைட் சிட்டிகளான நொய்டா, காசியாபாத் ஆகியவற்றை இணைக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, நவீன காற்றோட்டம், தானியங்கி வடிகால் மற்றும் சிசிடிவி கேமராக்கள் என உலக தரத்தில் சாலை கட்டப்பட்டது.

இந்நிலையில், மழை நீர் தேங்கியதன் காரணமாக இந்த சுரங்கப்பாதை பலமுறை மூடப்பட்டது. மேலும், மழை நீர் தேங்கியதால் பல நாட்கள் சுரங்கப்பாதை பயன்படுத்தப்படாமே இருந்தது. இதனால், நீர் கசிவு, விரிசல் என பல காரணங்களால் ஆபத்தான சாலையாக மாறியுள்ளது.

இந்த சுரங்க பாதைக்கு ஆயுட்காலம் 100 ஆண்டுகள் என கட்டுமான நிறுவனம் கூறிய நிலையில், 2 ஆண்டுகளுக்குள் சேதமடைந்து விட்டது.

இந்த சுரங்கப்பாதையில் டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேசிய அவர்கள், “பல சுரங்கப்பாதைகளில் நீர் கசிவு சிறிதளவு இருக்கும். ஆனால், இங்குள்ள கசிவை கட்டுமான நிறுவனம் சரிசெய்யவில்லை.

இதனால், பெரிய விரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது. இப்போது முழுமையான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. பயணிகளுக்கு பாதுகாப்பானது அல்ல. பழுது பார்த்தும் பயனிலை” என்றனர்.

இதனைத்தொடர்ந்து சுரங்க பாதையில் கட்டுமான நிறுவனமான எல்&டி நிறுவனத்திற்கு டெல்லி பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ” உரிய முறையில் மேற்கொள்ளப்படாத காரணத்தால் பிரகதி மைதான சுரங்கச் சாலை சேதமடைந்துள்ளது. இதற்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று கூறியது.

இதற்கு, அவதூறு கருத்துகளை நிறுவனம் மீது பரப்புவதாக, 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு எல்&டி நிறுவனம் டெல்லி பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...