நாட்டில் மூன்றாவது தடுப்பூசி செலுத்துதல் அவசியம் என மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு மருத்துவ சங்கம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில்
இரண்டு சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மக்களுக்கு மூன்றாவது தடவையாக பைஸர், அஸ்ராஜெனகா அல்லது மொடர்னா தடுப்பூசி அவசியம் வழங்கப்பட வேண்டும்
பைஸர் தடுப்பூசியை 20 – 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு செலுத்துவது விஞ்ஞானபூர்வ தரவுகளை மீறும் முறையற்ற செயற்பாடாகும்.
தடுப்பூசி செலுத்த தீர்மானிப்பவர்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் நிபுணர்கள் குழு ;மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் என்பவற்றின் அனுமதியுடன் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்,
60 வயதுக்கு மேற்படடவர்களிடையே அதிகளவு மரணம் ஏற்படுவதற்கு தடுப்பூசி தொடர்பான சரியான அறிவுறுத்தல்களை சரியாக பின்பற்றாமையே காரணம் – என்று தெரிவித்துள்ளது .
Leave a comment