istock 148314926
செய்திகள்அரசியல்இலங்கை

கடன்பெற்ற விரிவுரையாளர்களுக்கு வந்த சோதனை!!

Share

கலாநிதி பட்டம் பெறுவதற்கு அரசாங்கத்திடமிருந்து நிதியைப் பெற்று அதனை மீள செலுத்தாத விரிவுரையாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியை வழங்காமலிருக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க,

சில பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தமது கலாநிதி பட்டப்படிப்பை இடைநடுவே கைவிட்டுள்ளனர். இவர்களிற்காக அரசாங்கத்தினால் பல இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அத்தகைய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமக்கான ஓய்வூதியத்தை பெறும்போது, அவர்கள் செலுத்தவேண்டிய தொகையை ஊழிய​ர் சேமலாப நிதியிலிருந்து குறைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விரிவுரையாளர்களில் சிலர் தற்போது பல்கலைக்கழகங்களில் இருந்து விலகியுள்ளனர். என்றார்.

 

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...