உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று தீர்மானித்துள்ளது.
அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நேற்று முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
எனினும், இதன்போது இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் கலந்துரையாடிவிட்டு முடிவை அறிவிப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதன்பிரகாரம் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று கொழும்பில்கூடி ஆராய்ந்தனர். இக்கூட்டத்திலேயே போராட்டத்தை தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Leave a comment