Hesha Withanage
செய்திகள்அரசியல்இலங்கை

அரசின் கதை முடியப்போகின்றது! – ஹேஷா வித்தானகே

Share

” இந்த அரசின் கதை முடியப்போகின்றது. அரசை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். எனவே, இப்படியானதொரு அரசியலில் நான் இணையமாட்டேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே இன்று அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியை நான் ராஜினாமா செய்தது உண்மையே. இது தொடர்பில் செயலாளருக்கு தெரியப்படுத்தியிருந்தேன். பிரச்சினைகள் தொடர்பில் கட்சிக்குள் பேச்சு நடத்தி தீர்வை பெற முற்பட்டேன்.

எனினும், இந்த விடயத்தை ஊடகங்களில் அம்பலப்படுத்தியது யார்? ஐக்கிய மக்கள் சக்திக்குள் சூழ்ச்சிக்காரர்கள் உள்ளனர். அவர்களை சஜித் பிரேமதாச இனங்காண வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் முன்னோக்கி பயணிக்க விடமாட்டார்கள். அன்று ரணிலுடன் இருந்து ‘டீல்’ அரசியல் செய்தவர்கள் இன்று எமது அணியிலும் உள்ளனர்.

இந்த அரசின் கதை முடியப்போகின்றது. இது சிறு பிள்ளைகளுக்கும் தெரியும். நிலைமை அப்படி இருக்கையில் நான் எப்படி அரசில் இணைவேன்? மக்களுக்கான எனது அரசியல் பயணம் தொடரும். மக்களுடனேயே எனக்கு ‘அரசியல் உடன்படிக்கை’ உள்ளது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...