கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விற்று வரும் பெண்ணை பேருந்தில் ஏறவிடாமல் நடத்துனர் தடுத்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாகப் பேருந்து நிலையத்திலேயே அந்த பெண்மணி நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பான வீடியோக் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
குமரி மாவட்டத்தின் குளைச்சல் பகுதியில் உள்ள வாணியக்குடி மீனவக் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்ற பெண், குளைச்சல் பகுதியில் மீன் விற்பனை செய்துவிட்டு, தினமும் பேருந்தில் வீடு செல்வது வழக்கம்.
இந்தநிலையில் மீன்களை விற்றுவிட்டு மாலை வேளையில், அரசு பேருந்தில் பயணித்த போது, மீன் விற்றதால் நாற்றம் வருகிறது எனக்கூறி பேருந்திலிருந்து குறித்த பெண்ணை நடத்துனர் இறக்கிவிட்டுள்ளார்.
பேருந்து நிலையத்தில் உள்ள நேர காப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று எத்தனை முறை இதுபோல் கீழே இறக்கிவிட்டு நடந்தே போயிருக்கேன்… இதெல்லாம் ஒரு நியாயமா நீதியா எனக் கண்ணீர் மல்க கேட்டுள்ளார்.
இதுதொடர்பான காணொளிக்காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இந்தநிலையில், இச்சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து சாரதி மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேரக்காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பணியிடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
#IndiaNews
Leave a comment