இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் 103 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 30 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 14.1 ஓவர்கள் நிறைவில் 105 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
அதனடிப்படையில் 2-0 என்ற ரீதியில் தென்னாபிரிக்கா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
Leave a comment