130160
செய்திகள்உலகம்

கினியாவில் உதயமாகியது ராணுவ ஆட்சி! – அதிபர் சிறைப்பிடிப்பு

Share

கினியாவில் உதயமாகியது ராணுவ ஆட்சி! – அதிபர் சிறைப்பிடிப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது.

கினியா அதிபர் மாளிகை இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அதிபர் ஆல்ஃபா கோண்டே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசமைப்பு சாசனம் இனி நடைமுறையில் இருக்காது எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

கினியாவின் அரசுத் தொலைக்காட்சியில் இது தொடர்பில் பேசிய ராணுவத் தளபதி மமடி டோம்புயா,

நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.நாட்டை காப்பாற்றுவதே ஒரு ராணுவ வீரனின் கடமை. நாட்டில் தற்போது பதவியிலுள்ள மாகாண ஆளுநர்கள் அனைவரும் பதவி நீக்கப்படுவார்கள். எமது ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்த ராணுவப் புரட்சியை கண்டித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ், துப்பாக்கிமுனையில் உருவாக்கப்படும் ஆட்சியை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1000x630 3 1
உலகம்செய்திகள்

பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் இன்று (அக்டோபர் 17, 2025) 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச...

image 1000x630 2
செய்திகள்உலகம்

வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கி – டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இன்று

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17)...

image 1000x630 1 1
செய்திகள்இலங்கை

பெரும்பாலான பகுதிகளில் மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இன்றையதினம் (அக்டோபர் 17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டியது தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு...