hirunika premachandra
செய்திகள்அரசியல்இலங்கை

2023 இல் ஆட்சி கவிழும்!! – ஹிருணிகா சபதம்

Share

“2025 ஆம் ஆண்டுவரை காத்திருக்கமாட்டோம். 2023 இல் இந்த ஆட்சி கவிழ்க்கப்படும். பெண் சிங்கமாக மீண்டும் களமிறங்கியுள்ளேன். சஜித்தை ஜனாதிபதியாக்க பாடுபடுவேன்.”

இவ்வாறு சபதமெடுத்து அதிரடியாக அறிவிப்பு விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா.

கடுவலை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” கடுவலை தொகுதியில் மொட்டு கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளனர். நான் ஒரு பெண்ணாக இங்கு வந்துள்ளேன். இந்த கோட்டையையும் நிச்சயம் கைப்பற்றுவோம். 2025 வரை காத்திருக்கமாட்டோம். 2023 இல் ஆட்சி மாற்றம் இடம்பெறும்.

எமது தலைவர் சஜித்தை ஜனாதிபதியாக்கி மக்கள் ஆட்சியை மலரச்செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ” – என்றார்.

அதேவேளை, ஜனநாயக விரோத வழியில் பயணிக்கும் இந்த அரசுக்கு எதிராக மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவும் இக்கூட்டத்தில் பங்கேற்று அறைகூவல் விடுத்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...