அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடந்த மாதம் 23ம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபயபய ராஜபக்ஷ அமெரிக்காவுக்குச் சென்றிருந்த நிலையில், தனது உத்தியோக பூர்வ விஜயத்தை நிறைவு செய்து தனது பாரியாருடன் இன்று நாடு திரும்பியுள்ளார்.
அவர் இன்று காலை கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
Leave a comment