உலகத் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கிறார் !
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியின் உரை அமையவுள்ளது.
இத் தகவலை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றால் பாதிப்படைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதல், பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான வீழ்ச்சியை சரி செய்ய முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை தனித்தனியாக சந்திக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,
மேலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் முக்கிய பல விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கவுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இலங்கைக்கு ஆதரவான நாட்டுத் தலைவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி அவர்களுடனும் முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் எனவும் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
Leave a comment